குளத்தில் மூழ்கி வாலிபர் பலி நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்
திருவானைக்காவல் குளத்தில் நண்பர்களுடன் குளித்த போது நீரில் மூழ்கி வாலிபர் பலியானார்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் நரியன்தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருடைய மகன் ராஜா என்கிற ஹரிஹரன்(வயது 18). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் தீத்தடுப்பு பயிற்சி படிப்பு முடித்துள்ளார். நேற்று பகல் ராஜா, தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருவானைக்காவலில் உள்ள ராமதீர்த்த குளத்தில் குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் படிக்கட்டில் இருந்து குளத்தில் குதித்து தண்ணீரில் நீச்சல் அடித்து மைய மண்டபத்துக்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் ராஜாவை மட்டும் காணாததால் அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என கருதி உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து குளத்தில் குதித்து ராஜாவை தேடினார்கள். சிறிதுநேரத்துக்கு பிறகு தண்ணீருக்குள் இருந்து அவரை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.