மெட்ரோ ரெயில் அதிகாரிகளை மிரட்டியதாக அ.தி.மு.க. பிரமுகர் கைது

திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் அதிகாரிகளை மிரட்டியதாக அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்தனர்.

Update: 2018-01-07 22:45 GMT

திருவொற்றியூர்,

இந்த நிலையில் திருவொற்றியூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், 15 பேருடன் அங்கு சென்று தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இங்கு வேலை தரவேண்டும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகளுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தளவாடபொருட்கள் தயாரிப்பு திட்டஇயக்குனர் போஸ், தங்களை மிரட்டியதாக கிருஷ்ணன் மீது திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடுதலை செய்தனர்.

மேலும் செய்திகள்