திருச்சியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருச்சியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓடினர்.
திருச்சி,
சாலை விபத்தின்போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தி வருகிறார். மேலும் அவர் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர பகுதிகளில் ஹெல்மெட் சோதனை நடத்தி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் போலீசார் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர போலீசாரும், தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் இணைந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்க்கவசம் என்கிற தலைப்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டியை நேற்று காலை திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நடத்தியது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 கி.மீ தூரம் மாரத்தானும், 16 வயதுக்குஉட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு 4 கி.மீ மாரத்தானும் தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதனை திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு) மயில்வாகனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டத் தில் கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் தொடங்கி மன்னார்புரம் ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட் வழியாக மீண்டும் ரெயில்வே மைதானத்தில் முடிவடைந்தது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டம் கல்லுக்குழி மைதானத்தில் தொடங்கி மன்னார்புரம் ரவுண்டானா, மன்னார்புரம் மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் மைதானத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓடினர்.
16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டித்துரை, மாணவிகள் பிரிவில் திருப்பைஞ்சீலி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஹரிஸ், மாணவிகள் பிரிவில் மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி பிருந்தாவனம் குருகுலம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த தமிழ் இனியா ஆகியோரும் முதலிடம் பிடித்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.