“டி.டி.வி.தினகரன் மாற்று இயக்கம் தொடங்க வாய்ப்பு உள்ளது” சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி
டி.டி.வி.தினகரன் மாற்று இயக்கம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்.
திருச்சி,
திருச்சியில் ஒரு படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஆன்மிக அரசியல் பற்றி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. நானும் ஒரு ஆன்மிகவாதி தான். நல்லவிதமான, பொய் இல்லாத ஆன்மிக அரசை ஏற்றுக்கொள்ளும் நாடு நன்றாக இருக்கும். நாங்களே ஆன்மிக அரசியல் தான் செய்து வருகிறோம். இதனை வெளியில் சொல்வது இல்லை.
தமிழக அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. அதனால் தான் அவர்கள் தமிழக கவர்னரை, மக்களின் கவர்னர் என்கிறார்கள். கவர்னரின் செயல்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது இரட்டை தலைமைக்கு வழிவகுத்து விடும். அமைச்சர்கள் எங்களுடன் தான் சண்டைபோடுவார்கள். வேறு யாரையும் எதிர்ப்பது இல்லை. நாளை (இன்று) தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் தனி ஆளாக செல்ல இருக்கிறார். தினகரன் தனது கன்னிப்பேச்சில் அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி பேசுவாரா? என தெரியாது.
எங்கள் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் வெற்றிபெற்ற பின்னர் தான் அடுத்தகட்ட செயல்பாடு பற்றி கூற முடியும்.
ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட இந்த ஆட்சி இன்னும் மூன்றரை ஆண்டு காலம் தொடர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் இந்த ஆட்சியை பொறுத்தவரை அது இயங்குகிறதா? என்ற சந்தேகம் பாமர மக்களுக்கு கூட ஏற்பட்டு விட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினையை பேசி தீர்க்காமல், கோர்ட்டுக்கு செல்வது சரியானதல்ல.
டி.டி.வி.தினகரன் வெற்றிபெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது வெற்றி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. திரையில் நடித்துவிட்டு, தற்போது அரசியலில் குதித்து முதல்-அமைச்சராகி விடலாம் என கனவு கண்டவர்களால் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தை ஆளலாம் என நடிகர்கள் நினைப்பது தற்கொலை முயற்சிக்கு சமமானது. எம்.ஜி.ஆர். நடிகராக இருந்து மட்டும் முதல்-அமைச்சராகி விடவில்லை. திராவிடர் கழகம், தி.மு.க.வில் இருந்தார். பின்னர் எம்.எல்.ஏ. உள்பட பல பதவிகளை வகித்து மக்கள் பிரச்சினைகளை எல்லாம் சந்தித்து தான் பதவிக்கு வந்தார்.
தினகரனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் அவரைப்பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கமல்ஹாசன் தலைமை பதவிக்கு லாயக்கற்றவர். அவர் முதலில் தனது குடும்பத்தை காப்பாற்றட்டும். அதன்பின்னர் அவர் நாட்டை காப்பாற்ற வரட்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வராத தைரியம், இப்போது ரஜினிகாந்த்துக்கும், கமல்ஹாசனுக்கும் வந்திருக்கிறது.
அ.தி.மு.க. யாருக்கு என்பது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எங்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை பிடிப்பதற்காக டி.டி.வி.தினகரன் மாற்று இயக்கம் தொடங்குவதற்கான வாய்ப்பு, சாத்தியக்கூறு உள்ளது. இதனை அவர் தனியாக முடிவு செய்துவிட முடியாது. இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கலந்து பேசி தான் முடிவு செய்வார். ஏனென்றால் எங்களிடம் இருப்பது கூட்டு தலைமையாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சிலர் எங்களுக்கு சமாதி கட்ட நினைத்தார்கள், ஆனால் நாங்கள் கோபுரம் கட்டிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.