மணவாளக்குறிச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

மணவாளக்குறிச்சியில் கடன் தொல்லையால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-01-07 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது32).  இவர்கள் தற்போது புதிதாக  வீடு கட்டி னர். இதற்காக அக்கம் பக்கத்தினரிடம் இருந்து பணம் கடன் வாங்கினர். வாங்கிய கடனை திருப்ப கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால், கலைவாணி மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

கடன் தொல்லையால் அவதியடைந்த கலைவாணி நேற்று முன்தினம்  இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் கலைவாணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த கலைவாணிக்கு 7 வயதிலும், 4 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்