திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்துகழக தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 45 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை.
திருவாரூர்,
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அரசு போக்குவரத்துகழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என அறிவித்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக போக்குவரத்துகழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 இடங்களில் உள்ள பணிமனைகளில் மொத்தம் 239 நகர் மற்றும் புறநகர் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் திருவாரூர் பணிமனையில் இருந்து 38 பஸ்களும், மன்னார்குடியில் இருந்து 30 பஸ்களும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 31 பஸ்களும், நன்னிலத்தில் இருந்து 35 பஸ்களும் என மொத்தம் 139 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் 45 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. திருவாரூர் பணிமனையில் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிடைத்த பஸ்களில் ஏறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இதனால் ரெயில்களில் கூட்டம் காணப்பட்டது.