விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் கலெக்டர் தகவல்
சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் இருந்து சுழற்சி முறையில் 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பியது. தற்போது அணையின் நீர்மட்டம் 119 அடியாகவும், கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. எனவே அணையில் இருந்து நேரடியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், செல்வராஜ், சாத்தனூர் அணை பாசன சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், வி்வசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தற்போது சாகுபடி செய்துள்ள நெல், மணிலா ஆகியவற்றை காப்பாற்ற வருகிற 20-ந் தேதி முதல் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் திறந்தால் வறட்சி காலத்தில் அடுத்த போக பயிர் சாகுபடிக்கு உதவியாக இருக்கும் எனவும் விவசாயிகள் தரப்பில் இரு விதமான கருத்துகளை தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு பெரும்பான்மையான விவசாயிகள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து தண்ணீர் திறப்பது என அரசுக்கு பரிந்துரை செய்வதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்தார்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-
சாத்தனூர் அணையில் இருந்து 5 ஆயிரத்து 460 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே நேரடி விவசாய பாசனத்துக்கு திறக்க முடியும். எனவே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து சுழற்சி முறையில் 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கிறோம். அதன்பிறகு இருப்பு கணக்கிடப்பட்டு வாய்ப்பு இருந்தால், மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து வலதுபுறம் மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 19 ஆயிரத்து 450 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்து 550 ஏக்கர் உள்பட மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.