மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டு பேராசிரியர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று பொலிவியா நாட்டில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை வாங்கி சோதனையிட்டனர்.
பேராசிரியர் கைதுஇதில் பொலிவியா நாட்டை சேர்ந்த கோல்குவா டிஸ்டெரியோ குடிநெரஸ் (வயது65) என்பவர் கொண்டுவந்த ஒரு பைக்குள் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 2 கிலோ 400 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பொலிவியாவில் பேராசிரியராக இருப்பது தெரியவந்தது. அந்த நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மும்பையை சேர்ந்த ஒருவரிடம் இந்த போதைப்பொருளை கொண்டு போய் ஒப்படைத்தால் கமிஷனாக 4 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தருவதாக கூறியதன் பேரில், அதை கடத்தி வந்ததாக கூறினார்.
ரூ.15 கோடி மதிப்புஇதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து மும்பையில் போதைப்பொருளை வாங்க இருந்த நபரின் செல்போன் எண்ணுக்கு போன் செய்யும்படி கூறினர். அதன்பேரில் அவர் பலமுறை போன் செய்தார். ஆனால் சுதாரித்து கொண்ட அந்த நபர் தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். போலீசார் கைதான கோல்குவா டிஸ்டெரியோ குடிநெரசிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் கூறினர்.