தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் கொள்ளை முயற்சி
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் முகமதுசாதிக் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 26-ந்தேதியன்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சேலைகள் சிதறி கிடந்தன. ஆனால் நகை, பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இது குறித்து முகமதுசாதிக் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.