புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்தானந்தம் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
புதிய ஓய்வூதிய திட்டம்புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். வருகிற 18–ந்தேதிக்குள் வட்டார நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அந்தந்த மாதங்களிலேயே ஊதியம் வழங்க வேண்டும்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் ஆதார் எண் மற்றும் ரேஷன்கார்டு எண்ணை இணைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு 22 மாதங்களாக மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. அந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்ராஜ், நெல்லையப்பன், சந்திரசேகர், ஜான்கென்னடி, மாடசாமி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.