தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்
தூத்துக்குடியில், நேற்று பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்களை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடி,

சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள வெள்ளப்பட்டி 25 வீடு காலனியை சேர்ந்தவர் சார்லஸ். இவருடைய மனைவி ரெஜி செலின் (வயது 48). சார்லஸ் தனியார் இறால் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ரெஜி செலின் மீன்பிடி வலைகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று காலை 11 மணிக்கு வெள்ளப்பட்டி கடற்கரையில் வலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்த பின்னர் சிறிது நேரத்தில் அவர் கடற்கரையில் இருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனை அறிந்த கடற்கரையில் இருந்த சிலர், மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவரை பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன், சரண்யா, தலைமை காவலர் பழனிசாமி, முனியசாமி, தனிப்பிரிவு ஏட்டு செல்லப்பா ஆகியோர் தங்களின் வாகனங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
2 சிறுவர்கள் கைது
சம்பவம் நடந்த சுமார் ஒரு மணி நேரத்தில் துரைசிங் நகர் அருகே உள்ள காட்டு பகுதியில் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்தது. அந்த 2 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அந்த 2 பேரையும் தாளமுத்துநகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
நகை பறிமுதல்
விசாரணையில், அவர்கள் கீழ அழகாபுரி, துரைசிங் நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி, 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மீது தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.