பள்ளி மாணவன் தற்கொலை ஏன்? பெற்றோர்-ஆசிரியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
பள்ளி மாணவன் தற்கொலை ஏன்? பெற்றோர்-ஆசிரியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை
கருப்பூர்,
சேலம் அருகே கருப்பூர் பக்கமுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் இருக்கும் வெத்தலைக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தனக்கொடி. இவர்களது மகன் லோகேஷ் (வயது 12) சங்கீதப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு மாணவன் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டான். அவனுடன் பள்ளிக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்-பிரியா தம்பதியின் மகன் மோகன் (15) விஷம் குடித்துவிட்டு வாயில் நுரைதள்ளிய நிலையில் தனது வீட்டின் அருகே மயங்கி கிடந்தான்.
அவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவன் மேல்சிகிச்சைக்காக சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவன் லோகேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என அவனது தந்தை கிருஷ்ணன், தாய் தனக்கொடி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். மேலும், அந்த மாணவன் படித்த பள்ளியின் ஆசிரியர்களிடமும், மாணவன் மோகன் 10-ம் வகுப்பு படித்த மாட்டுக்காரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடமும் அவர்கள் விசாரித்தார்கள். இதில் மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கு சரிவர வராததும், படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. ஆனால், லோகேசின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மோகன் குணமடைந்தபின், அவனிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே அதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.