பொருட்கள் சரிவர வழங்கவில்லை என கூறி ரேஷன் கடை ஊழியரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறி ரேஷன் கடை ஊழியரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறியும், பொருட்களை வாங்க வரும் முதியோர்களை ரேஷன் கடை ஊழியர் தரக்குறைவாக திட்டுவதாகவும் கூறி அவரை கண்டித்து நேற்று கடைக்கு வந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.