வெறிநாய்களை பிடிக்க கோரி வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
வெறிநாய்களை பிடிக்க கோரி அரியமங்கலம் வார்டு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி மாநகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட அம்மாகுளம் பகுதியில் தெருநாய்கள் அதிகஅளவில் உள்ளன. அதில் சில நாய்கள் வெறிகொண்டு சாலையில் செல்லும் பலரை கடித்து விடுகின்றன. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்மாகுளம் கிளை செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பொது மக்கள் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி இளநிலை உதவிபொறியாளர் ஜெயகுமாரிடம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள நாய்கள் அனைத்தையும் பிடிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு ஜெயகுமார் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் சொல்லி உள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் திருச்சி மாநகராட்சி உக்கடை அரியமங்கலம், திடீர்நகர், 64-வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம், 65-வது வார்டுக்கு உட்பட்ட புத்துகோவில்தெரு, சுருளிகோவில்தெரு ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. அப்படி சுற்றித்திரியும் நாய்களில் சில நாய்களுக்கு வெறி பிடித்துள்ளது.
அதனால் அந்தப் பகுதியில் சாலையில் செல்பவர்களில் பலரை கடித்து வருவதாகவும் அதனால் தெருநாய்களை பிடிக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து ஜெயகுமாரிடம் கேட்டதற்கு நாய்தொல்லை இருப்பது உண்மைதான். அதை பிடிக்கலாம் என்றால் விலங்குகள் நலவாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதனால்தான் தெருநாய்களை பிடிக்க முடியவில்லை. இருந்தும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக கூறினார்.