மராட்டியத்தில் இரு சமூகத்தினர் இடையே மோதல் எதிரொலி முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை
மராட்டியத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மராட்டியத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா படையினருக்கு இடையே நடந்த போரில் ஆங்கிலேய படை வென்றது.
திடீர் வன்முறை
ஆங்கிலேயர் படையில் தலித் (மகர்) பிரிவினரும் பங்கேற்று இருந்ததாக வரலாறு கூறுகிறது.
எனவே இந்த போர் வெற்றியை ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி மகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி கடந்த 1-ந் தேதி புனேயின் பீமா-கோரேகாவில் உள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீர் வன்முறை வெடித்தது.
இருதரப்பினரும் பயங் கரமாக மோதிக்கொண்டனர். போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
வாலிபர் பலி
இந்த வன்முறையில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். இதையடுத்து அங்கு போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து, பீமா- கோரேகாவ் போர் வெற்றியை கொண்டாட சென்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மராட்டியம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் சாலை, தண்டவாளங்களில் இறங்கி வாகனங்கள் மற்றும் ரெயில்களை மறித்தனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. மாநகராட்சியின் பெஸ்ட் பஸ்கள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
இதேபோல தானே உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். மாநிலத்தில் 134 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
முழு அடைப்பு
இதற்கிடையே, பீமா- கோரேகாவ் வன்முறையை மாநில அரசு தடுக்க தவறிவிட்டதாக சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் குற்றம் சாட்டினார். அவர், பீமா- கோரேகாவ் வன்முறை சம்பவத்தில் மாநில அரசை கண்டித்து மராட்டியம் முழுவதும் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்படி நேற்று மாநிலம் முழுவதும் பீமா-கோரேகாவ் வன்முறை சம்பவத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மும்பையில் காலை நேரத்தில் கடைகள் வழக்கம்போல திறந்து இருந்தன. வாகனங்களும் இயங்கி கொண்டிருந்தன.
இந்தநிலையில், போராட்டக்காரர்கள் நகரத்தில் அனைத்து இடங்களிலும் கடைகளை மூடும்படி ஆவேசமாக கோஷம் எழுப்பியபடி ஆங்காங்கே சென்றனர். இதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. மேலும் சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் சாலைகளில் வாகனங்களை மறித்து பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடக்கப்பட்டது.
கல்வீச்சு
அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன. மும்பையில் பாந்திரா கலாநகர், தாராவி, காமராஜ் நகர், தின்தோஷி, ஹனுமான் நகர், விக்ரோலி உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் பெஸ்ட் பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதில், மொத்தம் 13 பஸ்கள் சேதம் அடைந்தன. 4 டிரைவர்கள் காயம் அடைந்தனர். விக்ரோலி மற்றும் காட்கோர் பகுதிகளில் சொகுசு பஸ் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சாலையில் கவிழ்த்து விடப்பட்டன.
வன்முறையாளர்கள் சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். பவாய், விக்ரோலி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
முழு அடைப்பு போராட்டம் தீவிரமானதை அடுத்து, வாகன போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
செம்பூர், காட்கோபர் காமராஜ் நகர், விக்ரோலி, தின்தோஷி, காந்திவிலி, ஜோகேஸ்வரி, கலாநகர், மாகிம் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் அதிகளவில் திரண்டனர். போக்குவரத்து முடங்கியதால், மும்பையின் பிரதான கிழக்கு மற்றும் மேற்கு விரைவு சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
ரெயில் மறியல்
போராட்டக்காரர்கள் 2-வது நாளாக நேற்றும் மின்சார ரெயில்களை மறித்தனர். மெயின் வழித்தடத்தில் தானே, பாண்டுப், காஞ்சூர்மார்க், விக்ரோலி, காட்கோபர், தாதர், சயான் ரெயில் நிலையங்களிலும், துறைமுக வழித்தடத்தில் கோவண்டி, மான்கூர்டு உள்ளிட்ட இடங்களிலும் தண்டவாளத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரண்டு வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் மின்சார ரெயில்களை நோக்கி கல்வீசி தாக்கியதையும் காண முடிந்தது. இது பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
மெட்ரோ ரெயில்
பல மணி நேரமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினர்.
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மலாடு, கோரேகாவ், அந்தேரி, நாலச்சோப்ரா, விரார், தகிசர் ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்திலும் மின்சார ரெயில் சேவை முழுவதும் பாதிக்கப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து மெட்ரோ ரெயிலும் தப்பவில்லை. அசல்பா மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் நுழைந்து, தண்டவாளத்தில் இறங்கி மெட்ரோ ரெயிலை மறித்தனர். போராட்டம் காரணமாக மத்திய ரெயில்வேயில் 110 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின.
பதற்றம்
ஆனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான பள்ளி பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. புனேயில் நடந்த முழு அடைப்பின் போது, 12 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதேபோல தானே, அவுரங்காபாத் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போக்குவரத்து அடியோடு முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. முழு அடைப்பில் நடந்த வன்முறை காரணமாக அனைத்து இடங்களிலும் பதற்றமான சூழல் நிலவியது. பாதுகாப்புக்காக ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
முழு அடைப்பு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
வழக்குப்பதிவு
இதற்கிடையே, பீமா-கோரேகாவ் வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் மிலிந்த் எக்போடே என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில், புனே சனிவார்வாடாவில் கடந்த மாதம் 31-ந் தேதி நடந்த போர் வெற்றி தின ஊர்வல தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஜராத் எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேக்வானி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமகர் காலித் ஆகியோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக புனே போலீசில் ஒரு தரப்பினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இதுபற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், மாலை முழுஅடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதன்பின்னர் சாலைகளில் வாகனங்கள் இயங்க தொடங்கின. ரெயில் போக்குவரத்தும் சீரானது. கடைகளும் திறக்கப்பட்டன. இதற்கிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பையில் 150 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.