திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவள்ளூரில் உள்ள புங்கத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள புங்கத்தூரை சேர்ந்தவர் தாவூத். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தாவூத் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தனர்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.இது குறித்து திருவள்ளூர் போலீசில் தாவூத் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.