உத்தமபாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் கூலித்தொழிலாளி.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ஜெயசூர்யா(16). ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவனை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவனை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தான்.