தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது...
அரையாண்டுத் தேர்வு முடிந்துவிட்டது. அனைத்துப் பாடங்களும் ஏறத்தாழ முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும். இனி முழு ஆண்டுத் தேர்வுக்கு, அரசுத் தேர்வுக்கு தயாராவதுதான் வேலை. அதற்கான திட்டமிடலை உருவாக்குவதற்கு சரியான தருணம் இதுதான்.
அரையாண்டுக்குப் பிந்தைய வகுப்புகள் தொடங்கும் நாளிலிருந்து திட்டமிட்டு செயல்படுவது சிறப்பான பலனைத் தரும். இதோ தேர்வுத் திட்டமிடலுக்கான சில ஆலோசனைகள்...
தமிழ் : தமிழ்ப் பாடம் முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல்தாளில் 55 மதிப்பெண்களுக்கு செய்யுள், 45 மதிப்பெண்களுக்கு உரைநடையில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒருமதிப்பெண் வினா, குறுவினா, நெடுவினா என தனித்தனியே கேள்விகள் கேட்கப்படுவது எளிதில் மதிப்பெண் பெற உதவியாக இருக்கும். செய்யுளுக்கு சரிபாதி மதிப்பெண்கள் இருப்பதால் பாடல்களையும், அதன் ஆசிரியரையும் குறிப்பிடுவது முழுமதிப்பெண் பெற துணை புரியும்.
தமிழ் இரண்டாம் தாளில் இலக்கணம், பொதுக்கட்டுரை பகுதிகள் இடம் பெறும். இலக்கணம் புரிந்து படித்திருந்தால் சுலபமாக அதிக மதிப்பெண்களை அள்ளிவிடலாம். கட்டுரை எழுதும்போது தலைப்பு, முன்னுரை, துணை தலைப்பு, முடிவுரை என தொகுப்பாக எழுதி, முக்கிய வரிகளை தனியே கோடிட்டு காட்டியோ, வண்ண மையால் காட்டி கவனம் ஈர்த்தால் மதிப்பெண்கள் உயரும். எழுத்துப்பிழை, சந்திப்பிழைகளை தவிர்க்க வேண்டும்.
இதற்கேற்ப பாடங்களை படிக்க திட்டமிடுங்கள். ஏற்கனவே படிக்காத பாடங்களை முதலில் முன்னுரிமை கொடுத்து படியுங்கள். இரண்டாவது எழுதிப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். ஏற்கனவே படித்த பாடங்களை உங்கள் கோணத்தில் கேள்வி பதிலாக தயாரித்து முயற்சி செய்யுங்கள்.
ஆங்கிலம் : கடினமான மொழி என்ற தயக்கத்தை விட்டொழித்தால் ஆங்கிலத்திலும் அதிக மதிப்பெண் பெறலாம். போயம், சினானிம், ஆன்டானிம்ஸ், பில் இன் த பிளாங்க்ஸ் போன்ற பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் பெறலாம். கடிதம் எழுதும்போது முகவரி, தேதி, அனுப்புனர், பெறுனர் போன்ற விவரங்களை மறக்காமல் குறிப்பிடுவது முழு மதிப்பெண் பெற உதவும். நானிடைல் பகுதியும் எளிமையாக மதிப்பெண் பெற உதவும். சிறுவினாக்களுக்கு துரிதமாக பதிலளித்தலே, மற்றவற்றுக்கு கூடுதல் நேரத்தை பயன்படுத்தி நல்ல மதிப்பெண் பெற முடியும்.
இதற்காக பாடங்களின் பின்னால் இருக்கும் ஒரு மார்க் கேள்விகளை மட்டும் ஒரு வாரம் திரும்ப படித்து நினைவுகூரலாம். அடுத்த வாரத்தில் போயம் மற்றும் எஸ்ஸே பகுதிக்கு ஒதுக்கலாம். இப்படியாக ஒவ்வொரு வாரத்தையும் ஒவ்வொரு பகுதிக்கு திட்டமிட்டால் நன்கு மனதில் பதியும். கடினமான பகுதிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கலாம்.
கணிதம் : கணிதப் பாடத்தில் தேற்றங்களைத் தவிர எதுவும் மனப்பாடம் செய்வதற்கில்லை. எனவே பயிற்சி மட்டுமே கணிதத்தில் முழு மதிப்பெண் பெற உதவும். பாடங்களின் பின்னே உள்ள பயிற்சி வினாக்களை மீண்டும் மீண்டும் சொந்தமாக முயற்சி செய்து சரியான விடையை கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்ஜிப்ரா, ஜியாமென்ட்ரி, கிராப் ஆகிய பகுதிகளை நன்கு படித்திருந்தால் குறைந்த மதிப்பெண் வினாக்களை நிறைவாக எதிர்கொள்ளலாம்.
கணித வினாக்கள் மறைமுகமாக கேட்கப்பட்டால் நிறைய குழப்பத்தை உருவாக்கி, மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத தடுமாற்றத்தை உருவாக்கி விடும். எனவே முதலில் ஒரு மதிப்பெண் மற்றும் கிராப் போன்றவற்றை முழுமையாக முடித்து தேர்ச்சி மதிப்பெண்களை உறுதி செய்து கொண்டால் நிதானமாக மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க உதவியாக இருக்கும். அதிக மதிப்பெண் வினாக்கள் எளிமையாகத் தோன்றினால் முதலில் அதை முடித்துவிட்டாலும் பதற்றத்தை தணித்து உயர் மதிப்பெண் பெறலாம்.
நண்பன் அல்லது பெற்றோர் துணையுடன் மாற்றி மாற்றி கணிதப்புதிர் போட்டு பயிற்சி பெற்றால் பலன் நிச்சயம்.
அறிவியல் : அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களும், சிறுகுறு வினாக்களும் எளிமையாக மதிப்பெண் பெற உதவும். விரிவான வினாக்களுக்கு அவசியமான படங்கள் வரைந்து பாகம் குறிப்பது முழுமையான மதிப்பெண்ணுக்கு உதவும். படங்களை அடிக்கடி வரைந்து பார்த்தவர்களால் மட்டுமே சரியாக படம் வரைய முடியும் என்பதால் இப்போதிருந்தே முக்கியமான படங்களை ஓய்வு நேரத்தில் வரைந்து பாருங்கள். கைப்பழக்கத்தில்தான் சித்திரம் வரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பவர்கள் இது போலவே தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாடங்களில் எந்தெந்த பகுதிகளில் இருந்து, வினாக்கள் எடுக்கப்படுகின்றன என்பதை முந்தைய மாதிரி வினாத்தாளில் இருந்து கணித்து திட்டமிடலாம். ஆசிரியர் உதவியுடன் முக்கியமானவற்றை படித்து பயிற்சி பெறலாம். சுலபமாக மதிப்பெண் பெறும் வழிகளையும் ஆசிரியரிடம் கேட்டுப் பெறுங்கள்.
சுமார் 60 சதவீத மதிப்பெண்களை ஒரு மதிப்பெண், சிறுகுறு வினாக்களிலேயே பெற முடியும் என்பதால் தேர்ச்சி பெறுவது ஒன்றும் கடினமான விஷயமில்லை. அதிகம் எழுதுவது அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் என்று எண்ண வேண்டாம். சரியான, தெளிவான பதிலே முழுமதிப்பெண் தரும் என்பதை மனதில் வைத்து தெரிந்ததை, சரியானதை மட்டும் பதிலாக எழுதுங்கள்.
இப்போதிருந்தே நாட்களையும், பாடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிடுங்கள். புரியாத பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். அதிகாலையில் படிப்பது கடினமான பாடத்தையும் எளிதாக மனதில் பதிந்து கொள்ள உதவும். இரண்டு அல்லது 4 பேர் குழுவாக சேர்ந்து கொண்டு திட்டமிட்டுப் படித்தால் போட்டி மற்றும் பல்சுவைத் திறனுடன் நிறைய மதிப்பெண் பெறலாம். அப்படி குழு உருவாக்க முடியாதவர்கள், பெற்றோரை ஆசிரியராக கருதி அவர்கள் துணையுடன் தேர்வுக்கு தயாராகலாம். வெற்றி நமதே, வாழ்த்துக்கள்!