எய்ம்ஸ் மையத்தில் நர்ஸ் வேலை

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் எனப்படுகிறது.

Update: 2018-01-03 06:16 GMT
இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் இந்த மருத்துவமையத்தின் ரிஷிகேஷ் கிளையில் தற்போது அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட், ஸ்டாப் நர்ஸ் போன்ற குரூப்-ஏ, குரூப்-பி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 125 இடங்களும், அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 28 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங் 4 ஆண்டு படிப்பு, படித்து நர்சிங் கவுன்சிலிங்கில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கும், 2 ஆண்டு நர்சிங் படிப்பு படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsrishikesh.edu.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 4-1-2018-ந் தேதியாகும்.

மேலும் செய்திகள்