கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை

கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 21:15 GMT

கம்மாபுரம்,

கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், அரசியல் கட்சியினர், மனு கொடுத்தனர். அந்த மனுவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளை மறுவரையறை என்ற பெயரில் மறுவரையறை செய்தது மக்களின் உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளை செய்வதிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும். தேர்தல் ஆணையத்தின் மூலம் மறுவரையறை என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளை மக்களுடைய கருத்துக்களை கேட்காமல் கிராம ஊராட்சி வார்டுகளை கண்மூடித்தனமாக பிரித்திருப்பதை கைவிட்டு மீண்டும் மக்களின் கருத்துக்களை ஏற்று அதன்படி நடந்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், இது பற்றி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைத்து கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்