வார்டு வரையறையை மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளை வரையறைப்படுத்தும் பணி நடைபெற்றது.

Update: 2018-01-02 21:45 GMT

வடமதுரை,

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளை வரையறைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 7–வது வார்டு பகுதியில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் பி.கொசவபட்டி பகுதிக்கு மாற்றி வரையறை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், வார்டு வரையறை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 7–வது வார்டு பகுதியை ஏற்கனவே இருந்தவாறு தென்னம்பட்டி ஊராட்சியுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் தங்கள் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைப்பதுடன் உள்ளாட்சி தேர்தலின் போது வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர்.

 இதையடுத்து இதுதொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்