வக்கீல்கள் வெள்ளை ‘பேட்ஜ்’ அணிந்து கோர்ட்டுக்கு வந்தனர்

திருப்பத்தூரில் வக்கீல்கள் வெள்ளை ‘பேட்ஜ்’ அணிந்து கோர்ட்டுக்கு வந்தனர்

Update: 2018-01-02 22:30 GMT
திருப்பத்தூர்,

வக்கீல்கள் வழக்கு சம்பந்தமாக இனி வக்காலத்து போடும்போது, வக்கீல் அடையாள அட்டை நகல் மற்றும் போட்டோ ஒட்டி கையெழுத்துபோட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூரில் வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வெள்ளை ‘பேட்ஜ்’ அணிந்து கோர்ட்டிற்கு சென்றனர்.

அதைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தில் மூத்த வக்கீல்கள் கலீல், ஜேக்கப், உதயகுமார், சி.பாண்டியன், அன்பழகன், மனோகரன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். முடிவில் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்