’பார்‘ ஒப்பந்ததாரர்கள் முற்றுகை போராட்டம்
விருதுநகர் சூலக்கரையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை ‘பார்’ ஒப்பந்ததார்கள் சங்க தலைவர் குமரவேல் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை ‘பார்’ ஒப்பந்ததார்கள் சங்க தலைவர் குமரவேல் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் டாஸ்மாக் மேலாளரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. அதில் 15 வருடமாக சுமூகமாக தொழில் செய்து வந்த நிலையில் வாடகை என்ற பெயரில் சொற்ப தொகை வழங்கப்பட்டு வந்தாலும் கடைகளுக்கான முழு வாடகையையும் ஒப்பந்ததார்களே வழங்கி வந்தோம். தற்போது தொழிலை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
எனவே கடையை காலி செய்து விட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் மின் இணைப்பை துண்டிக்கும் நிலை உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தனர்.