வீச்சு அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது
புதுவை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் வீச்சு அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
புதுச்சேரி,
புதுவை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் வீச்சு அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீச்சு அரிவாளை காட்டி மிரட்டி நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ரவுடியான அருண் (வயது25) என்பது தெரியவந்தது. அதையடுத்து அருணை போலீசார் கைது செய்து வீச்சு அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.