டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சியில் உள்ள எஸ்.மேட்டூர் என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான இடத்தையும் தேர்வு செய்து மதுபாட்டில்களை கொண்டு வந்து இறக்கினர். நேற்று காலை கடையை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த எஸ்.மேட்டூர் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த தாசில்தார் மகாலெட்சுமி தாலுகா அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு பொதுமக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் தாசில்தார்(டாஸ்மாக்) ஆறுமுகம், மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடை திறப்பை தற்காலிகமாக நிறுத்துவது, மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதனைஏற்று தாங்கள் கொண்டு வந்த ரேஷன்கார்டு மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மண்ணச்சநல்லூரில் பரபரப்பு நிலவியது.