கோபியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோபி வாய்க்கால் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

Update: 2017-12-31 22:15 GMT

கடத்தூர்,

கோபி வாய்க்கால் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதன் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கவிதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொதிகைசுந்தர், மண்டல செயலாளர் விஜய்வின்சென்ட் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்