தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் கேரட்
பச்சையாகவோ, சமைத்தோ, தினமும் கேரட்டை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் காய்கறிகளில் ஒன்று, கேரட். இதன் இனிப்புச் சுவை காரணமாக குழந்தைகளும் கூட இதை பச்சையாகவே சாப்பிட விரும்புவர்.
பச்சையாகவோ, சமைத்தோ, தினமும் கேரட்டை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கலாம் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிலர் கேரட் பிரியர்களாக இருப்பார்கள். அப்படி கேரட்டை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு அது வழங்கும் நற்பலன்கள் ஏராளம்.
கேரட்டை அதிகம் உணவில் எடுத்துக்கொள்வோருக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக்குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது.
கேரட்டை சமைத்து உண்பதைவிட, பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பான்மையான சத்துகள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேருகின்றன.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன், கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும்.
கேரட், ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது, விருத்தி அடையச் செய்கிறது. மேலும், குடல்புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும்.
கேரட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏயில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடும்.
மஞ்சள்காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது. பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் உதிரப்போக்கை கேரட் கட்டுப்படுத்துகிறது.
உருளைக்கிழங்கைவிட கேரட்டில் ஆறு மடங்கு சக்தி அதிகம் இருக்கிறது. கேரட் எளிதில் ஜீரணமாகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது.
சருமத்துக்குப் பொலிவைத் தந்து, தோலில் ஏற் படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.