வெல்டிங் எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் தொழிலாளி ரெயில் மீது தூக்கி வீசப்பட்டார்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணியின் போது வெல்டிங் எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் தொழிலாளி ரெயில் மீது தூக்கி வீசப்பட்டார்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைமேம் பாலம் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் ரெயில் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நடைமேடையில் உள்ள பார்சல் ஆபீஸ் பின்புறத்தின் இருந்து தொடங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நடைமேடையில் இருந்து 7-வது நடைமேடை வரை இந்த நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக கனரக வாகனங்கள் மூலம் இரும்பு கர்டர்கள் பார்சல் ஆபீஸ் பின்புறத்தில் இருந்து 1-வது முதல் 7-வது நடைமேடை வரை பொருத்தப்பட்டது.
தற்போது 4, 5-வது நடைமேடைகளின் இடையே நடைமேம்பாலத்திற்கான படிக்கட்டுகள் அமைப்பதற்காக இரும்பு கர்டர்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெல்டிங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 4-வது நடைமேடையின் மேல் அமைக்கப்படும் நடைமேம்பாலத்தில் இரும்பு கர்டர்களை வெல்டிங் செய்யும் பணியில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த ரவி மகன் கணேஷ் (வயது 26) ஈடுபட்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகள் ரெயில் 4-வது நடைமேடையில் பயணிகளை இறக்கி விட்டு நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கணேஷ் கையில் வைத்திருந்த வெல்டிங் எந்திரத்தின் கேபிள் வயர் 4-வது தண்டவாளத்தில் மேல் சென்று கொண்டிருந்த ரெயில்வே மின்சார கம்பியில் உரசியது. இதில் கேபிள் வயரில் அதிகளவு மின்சாரம் பாய்ந்து கணேஷ் வைத்திருந்த வெல்டிங் எந்திரம் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.
இதில் கணேஷ் மீது மின்சாரம் பாய்ந்து, உடலில் தீ பரவியதால் நடைமேம்பாலத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு, கீழே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது விழுந்து, பின்னர் 4-வது நடைமேடையில் விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களும், நடைபாதையில் வேலை பார்த்து கொண்டிருந்த சக தொழிலாளர்களும் ஓடிச்சென்று படுகாயமடைந்த கணேசை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் நடைமேம்பாலம் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களும் விசாரித்து வருகின்றனர்.
நடைமேம்பால பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவார்கள். வேலையின் போது அவர்களுக்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர் வழங்குவதில்லை. எனவே மேற்கண்ட சம்பவம் போன்று இனிமேலும் நடைபெறாமல் இருக்க ஒப்பந்ததாரர் பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.