டிஜிட்டல் மயமாகும் 300 ஆண்டு கால புத்தகங்கள்
பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ்-பிரிட்டிஷ் நூலகம் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ்-பிரிட்டிஷ் நூலகம் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 முதல் 1870-ம் ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் நடந்தேறின. தந்தி அனுப்பும் முறை, பயண ரெயில், அடிமைத்தன ஒழிப்பு ஆகியன மக்களை அடைந்ததும் இந்த கால கட்டத்தில் தான். இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக்கொள்கிறது என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும். திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன. இந்த திட்டம் முடிய சில ஆண்டுகள் ஆகலாம்.
பிரிட்டிஷ் நூலகம் கடந்த 258 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கூகுள் புக்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 40-வது நூலகம் இது. பிரிட்டிஷ் நூலகம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் பிரைட் சாலிட் நிறுவனங்களுடனும் இதுபோன்ற ஒப்பந்தத்தினை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்போது, அவற்றை பரிமாறிக் கொள்வது மிக எளிதாகும். உலகில் எங்கிருந்தும் இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆய்விற்கு தகவல்களை தேடுவது எளிதாகும். இதன்மூலம் மனித குலத்தின் அறிவுத்தேடல்கள் அனைத்தும் வாழும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும். அறிவின் படிமங்கள் மட்டுமின்றி, நம் சமுதாயப் பண்பாடு, கலை, சரித்திர நிகழ்வுகளை எதிர்காலத்தில் அனைவரும் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள். அனைத்து நாடுகளும், நிறுவனங்களும், சமுதாயமும் இதனை பின்பற்ற கூகுளும், பிரிட்டிஷ் நூலகமும் பாதை வகுத்துள்ளன என்றால் அது மிகையில்லை.