தியேட்டரில் வாய்க்கு என்ன வேலை?

தியேட்டர்களில் படம் பார்க்க செலவு செய்வதைவிட, இடைவேளை நேரத்தில் பாப்கான், பர்கர், பப்ஸ்களுக்கு செலவு செய்யும் தொகையே பலருக்கு அதிகமாக இருக்கிறது.

Update: 2017-12-22 07:30 GMT
தியேட்டர்களில் படம் பார்க்க செலவு செய்வதைவிட, இடைவேளை நேரத்தில் பாப்கான், பர்கர், பப்ஸ்களுக்கு செலவு செய்யும் தொகையே பலருக்கு அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தியேட்டருக்கு சினிமா பார்க்க வருபவர்களை விட, மனைவி குழந்தைகளை சந்தோஷப் படுத்தும் வகையில் இடைவேளை நேரத்தில் இதுபோன்ற பொருட்களை வாங்கித் தர வருகை தருபவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனலாம். அப்படிப்பட்டவர்களை தான், கடுமையாக கடிந்து கொள்கிறார், மைக்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் ஷோட்டனுக்கு, திரைப்படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் புதிதாக வெளிவரும் திரைப்படங்களை முதல் நாளிலேயே கண்டு கழித்து விடுவார். திரைப் படத்தில் மெய்மறந்திருக்கும் மைக்கிற்கு, பாப்கார்ன் சத்தம் இடைஞ்சலாக இருக்கிறதாம்.

‘தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றால், என்னால் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படத்தில் வரும் ஒலியை விட, பாப்கார்ன் சாப்பிடுபவர்களின் ஒலி, என்னைத் தொந்தரவு செய்கிறது. சமீபத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தபோது, பாப்கார்ன் ஒலி இருமடங்காகி விட்டது. தியேட்டரில் பெரும்பாலானவர்களின் கைகளில் பாப்கார்ன் பாக்கெட்டுகள் இருந்தன. அனைவரும் அசை போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நல்ல திரைப்படத்தை பாப்கார்ன் ஒலி எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் ‘தியேட்டருக்குள் வைத்து பாப்கார்ன் சாப்பிடுவதைத் தடை செய்ய வேண்டும்’ என்று மனு போட்டிருக்கிறேன். கையெழுத்து இயக்கம் நடத்துகிறேன். ஆனால் அதற்கு ஆதரவு அவ்வளவாக இல்லை. வேறு விதங்களில் போராட்டத்தை நடத்திச் செல்ல முடிவு செய் திருக்கிறேன். 2 மணி நேரம் படம் பார்க்கும்போது, கண்களுக்கும் காதுகளுக்கும் தான் வேலை இருக்கிறது. வாய்க்கு என்ன வேலை?’ என்று கேட்கிறார் மைக்.

மேலும் செய்திகள்