சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது புகழேந்தி பேட்டி

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டதால், சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது என்று புகழேந்தி கூறினார்.

Update: 2017-12-21 22:07 GMT
ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி நேற்று முன்தினம் வெளியானது. இந்த வீடியோவை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரும், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், பெங்களூர் அ.தி.மு.க. முன்னாள் பொறுப்பாளருமான புகழேந்தி நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற வீடியோவை வெற்றிவேல் அவரது முயற்சியால் வெளியிட்டு உள்ளார். இதனால் சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் காலை வெட்டிவிட்டார்கள், கொன்று விட்டார்கள் என்றெல்லாம் சசிகலா மீது பழிபோட்டார்கள். இந்த வீடியோ அந்த களங்கத்தை துடைத்து விட்டது. இதனை மக்கள் பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

மேலும் செய்திகள்