முதுமலையில் 5 புலிகள், 2 சிறுத்தைகளை நேரில் பார்த்ததாக தகவல்
முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வரும் புலிகள் கணக்கெடுக்கும் பணியின் போது, கணக்கெடுப்பாளர்கள் 5 புலிகள், 2 சிறுத்தைப்புலிகளை நேரில் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ளது.
மசினகுடி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. ஆண்டுக்கு 2 முறை புலிகளின் எண்ணிக்கையை கண்காணித்து கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி கடந்த 18-ந்தேதி அதிகாலை முதல் தொடங்கியது. துல்லியமாக கணக்கெடுக்க முதன் முறையாக ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 36 குழுவினர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டு தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து புலிகளை கண்காணித்து கணக்கிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேர்கோட்டு பாதையிலும், நீர் நிலைகளிலும் சென்று புலிகளின் கால்தடம், எச்சம் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களை கொண்டு கணக்கெடுத்து வருகின்றனர். அத்துடன் கணக்கெடுப்பிற்கு செல்லும் போது நேரடியாக தென்படும் புலிகள் மட்டுமின்றி சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற வனவிலங்குகளும் கணக்கிடப்படுகின்றன.
கடந்த 18-ந்தேதி தொடங்கிய இந்த கணக்கெடுப்பில் இதுவரை 5 புலிகள், 2 சிறுத்தைப்புலிகள், 15 செந்நாய்கள், நூற்றுக்கணக்கான யானைகள், மான்கள் போன்றவைகளும் நேரடியாக கணக்கெடுப்பாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பு பணி நாளை (சனிக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது. அனைத்து குழுவினரும் ‘மொபைல்ஆப்’ மற்றும் டேட்டா சீட்களில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் நாளை மாலை முதுமலை புலிகள் காப்பக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கணக்கெடுப்பின் போது 9 புலிகள் வரை நேரடியாக பார்த்துள்ளனர். நேற்று வரை 5 புலிகளை பார்த்துள்ளனர். இதனால் கணக்கெடுப்பாளர்கள் மேலும் புலிகளை பார்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.