சித்தராமையா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திற்கு மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது
முதல்–மந்திரி சித்தராமையா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திற்கு மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.
சிக்கமகளூரு,
முதல்–மந்திரி சித்தராமையா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திற்கு மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.
சித்ரதுர்காவில், கர்நாடக மாநில சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தாக்கத்தை ஏற்படுத்தாதுகுஜராத், இமாசல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் குஜராத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பா.ஜனதா வெற்றி பெறவில்லை. குஜராத்தில் போராடியே பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது. குஜராத்தில் பா.ஜனதா வெற்றி கர்நாடக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி, நாட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.
இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கிறார். எதிர்வரும் காலத்தில் குஜராத்தில் பா.ஜனதாவை, காங்கிரஸ் தோற்கடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வரவேற்பு கிடைத்து உள்ளதுகுஜராத், இமாசல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பா.ஜனதாவினர் முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை நாங்கள் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் சந்திப்போம். முதல்–மந்திரி சித்தராமையா மேற்கொண்டு உள்ள சுற்றுப்பயணத்திற்கு மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.