மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பத்திர எழுத்தர் சாவு
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பத்திர எழுத்தர் பரிதாபமாக இறந்தார்.
நார்த்தாமலை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியை சேர்ந்தவர் கனகவேல்(வயது 70). பத்திர எழுத்தரான இவர், அன்னவாசலில் பத்திரம் எழுதும் வேலையை முடித்து விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் செங்கப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் இலுப்பூர் பூமருதுபட்டியை சேர்ந்த துரைசாமி (37) மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக துரைசாமியின் மோட்டார் சைக்கிள், கனகவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகவேல் படுகாயமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கனகவேலை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கனகவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய துரைசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.