விபத்தில் பலியான வாலிபரின் உடலை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், நடுரோட்டில் கவிழ்ந்தது
விபத்தில் பலியான வாலிபரின் உடலை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் திட்டக்குடி அருகே தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநத்தம்,
ஜார்கண்ட் மாநிலம் லக்கிபூரை சேர்ந்தவர் தேவன் மேண்டல் மகன் ராம்குமார் (வயது 18). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட விபத்தில் ராம்குமார் பலியானார். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு நேற்று முன்தினம் சொந்த ஊரான லக்கிபூர் நோக்கி புறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திட்டக்குடி அருகே உள்ள லக்கூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் தறி கெட்டு ஓடியது.
அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான ஆம்புலன்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த ராம்குமார் உடலை மற்றொரு ஆம்புலன்சில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.