பழக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற மீன் வியாபாரி- தொழிலதிபர் கைது
திருச்சியில் பழக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற மீன் வியாபாரியையும், அவருக்கு அந்த நோட்டை கொடுத்த தொழிலதிபரையும் போலீசார் கைது செய்தனர். அந்த தொழிலதிபருக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்த வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
கோவை மாவட்டம் தேவம்பாளையம் நடு வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு பழக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் ரஞ்சித்குமார் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, ஆண் ஒருவர் பழங்கள் வாங்க வந்தார்.
அப்போது அந்த நபர் வாங்கிய பழங்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து விட்டு மீதி பணம் வாங்குவதற்காக கடையில் நின்று கொண்டிருந்தார். ரூ.2 ஆயிரத்தை வாங்கிய ரஞ்சித்குமார், அதை கள்ள ரூபாய் நோட்டை கண்டறியும் எந்திரத்தில் வைத்து சோதனை செய்தார்.
அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்குமார் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கொடுத்த அந்த நபரை கையும், களவுமாக பிடித்து, கள்ள நோட்டுடன் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த மீன் வியாபாரி சசிக்குமார்(36) என்பது தெரியவந்தது. அந்த கள்ள நோட்டு அவருக்கு எப்படி கிடைத்தது? என்று சசிக்குமாரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய சிகிச்சைக்காக, தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெரு அல்லிமால் தெருவில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் கலிலுல் ரகுமானிடம்(45) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடனாக ரூ.2 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கலிலுல் ரகுமானை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், எனது நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கினார். அதற்காக ரூ.12 ஆயிரம் கொடுத்தார். அதில் ரூ.10 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளும் மற்றும் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் இருந்தது. அதை கடனாக சசிக்குமாரிடம் கொடுத்தேன் என்று கலிலுல் ரகுமான் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பழக்கடை மேலாளர் ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், கலிலுல் ரகுமான் ஆகிய 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலிலுல் ரகுமானிடம் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்த வட மாநில வாலிபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் திருச்சியில் புழக்கத்தில் இருந்து வருவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது. எடமலைப்பட்டிபுதூர் வார சந்தையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற கிருத்திகா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது புழக்கத்தில் விடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு 4, போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்திகாவுக்கு அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்த சென்னை சூளக்கரையை சேர்ந்த காதர் பாஷாவையும் போலீசார் கைது செய்தனர். எனவே அந்த கும்பலுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்குமோ? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பிடிபடும் சம்பவங்கள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.2 ஆயிரம் நோட்டை யார் கொடுத்தாலும், அது நல்ல நோட்டு தானா என்பதை ஆய்வு செய்த பிறகே வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.