2 ஜி ஊழல் வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுவிப்பு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால், நெல்லை மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, கொண்டாடினர்.

Update: 2017-12-21 21:30 GMT

சங்கரன்கோவில்,

2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால், நெல்லை மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, கொண்டாடினர்.

சங்கரன்கோவில்

2 ஜி ஊழல் வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் தேரடி திடல், பழைய பஸ் நிலையம், திருவேங்கடம் சாலை ஆகிய இடங்களில் நகர தி.மு.க. சார்பில், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நகர செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணி நிர்வாகிகள் பிரகாஷ், குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முனியசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினாகள் மாரிச்சாமி, அண்ணாவியப்பன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

வள்ளியூரில் ஒன்றிய செயலாளர் ஞானதிரவியம் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் சேதுராமலிங்கம், வக்கீல் தவசிராஜன், இளைஞரணி ஆதிபரமேஸ்வரன், தில்லை, மந்திரம், சிவதாணு, முத்துராமன், சுரேஷ், சட்டநாதன், காதர்மைதீன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை பூக்கடை சந்திப்பில் நகரச் செயலர் பிரபாகரன் தலைமையில், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் வசந்தா ஆரோக்கிய மேரி, நகர அவைத்தலைவர் ஆறுமுகம், நகர துணைச் செயலர்கள் பாலகிருஷ்ணன் விநாயகமூர்த்தி, பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, காந்திமதிநாதன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோவிந்தராஜ், அலெக்சாண்டர், சுப்பையா, காஜாமுகைதீன், இளைஞரணி கார்த்திக், மாணவரணி சஞ்சய், விவசாய அணி முத்துப்பாண்டி, வக்கீல் அணி சாகுல்ஹமீது மீரான், திருமலைக்குமார், சாமிநாதன், சரவணநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர செயலாளர் ரகீம் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் பேபிரெசவுபாத்திமா, மாவட்ட பிரதிநிதி பால்அய்யப்பன், நகர துணை செயலாளர் குட்டி ராஜா, பொருளாளர் ஜெயராஜ், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் குற்றாலிங்கம், மேரி, வக்கீல்கள் அணி நிர்வாகிகள் லூக் ஜெயக்குமார், அமானுல்லாகான், மாரிக்குட்டி, சக்திவேல், செல்லத்துரை, இளைஞரணி நிர்வாகி ராஜா முகம்மது, ராஜா, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை கலைஞர் தமிழ் சங்கம் சார்பில், செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.

தென்காசி

தென்காசி நகர தி.மு.க.வினர் காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கினர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பால்ராஜ், கலை பால்துரை, மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் கனி, பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை, நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் ராமதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எதிரில் தி.மு.க வக்கீல் அணியினர் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி தலைமையில், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். இதில் துணை அமைப்பாளர்கள் செந்தூர் பாண்டியன், முத்துக்குமாரசாமி, ராஜா, குமார், சுரேஷ், சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை

திசையன்விளையில் ராதாபுரம் முன்னாள் யூனியன் சேர்மன் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திசையன்விளை நகர செயலாளர் டிம்பர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூர்

மானூரில் ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குழந்தை ஏசு, மானூர் அவைத்தலைவர் தளவாய், கிளை நிர்வாகிகள் மாரிவேல் கலைஞர், அந்தோணிராஜ், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை முன்பு தொழிலதிபர் காளிதாசன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் அருணோதயம், இளங்கோ, பஞ்சாயத்து செயலர் சீனித்துரை காலசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காட்டில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜன் தலைமையில், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் சிவசங்கரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வகருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்