விபத்து ஏற்படுத்தும் மோட்டார் சரக்கு வாகனங்களுக்கு தடை வருமா?
காரைக்குடி நகரில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் மோட்டார் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
காரைக்குடி நகரில் மோட்டார் மூலம் இயக்கப்படும் சரக்கு வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் அதனை ஓட்டுபவர்கள், தாங்களாகவே தயாரித்த மோட்டார்களை வைத்து இயக்கி வருகின்றனர். இந்த வாகனங்கள் நகரின் நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் இயக்கப்பட்டு அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஓட்டிச் செல்பவர்களும் ஆபத்தான முறையிலேயே பயணிக்கின்றனர். மோட்டார் எந்திரங்கள் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் துல்லியமான தயாரிப்பில் இருக்க வேண்டும். ஆனால் இந்த வாகனங்களில் முறையாக எதுவும் இல்லை. பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தன்னிச்சையாக தயாரித்து இயக்கப்படும் இந்த வகை வாகனங்களால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த வகை மோட்டார் வாகனங்கள் எங்கு தயாரிக்கப்பட்டது, இதற்கு ஆர்.சி. புத்தகம் மற்றும் பதிவு எண் உள்ளதா, இதன் என்ஜின் எண் என்ன, இதற்கு ஓட்டுனர் உரிமம் உண்டா, சாலை வரி செலுத்தப்பட்டுள்ளதா, அதற்கு எப்.சி. மற்றும் இன்சூரன்ஸ் இருக்கிறதா, உரிமையாளர் யார் என்ற பல கேள்விகளுக்கு பதில் தேடினாலும் இல்லை.
சாதாரண தொழிலாளிகளே இந்த வகை வாகனங்களை பயன்படுத்தினாலும், அவர்களது உயிரை பாதுகாப்பது அரசின் கடமை. சம்பாதிப்பதே உயிர் வாழத்தான். எனவே உயிர்களை பாதுகாக்க இதுபோன்ற வாகனங்களை இயக்க தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையில் இதுபோன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு தடை இருக்கிறது. அதேபோன்று காரைக்குடியிலும் தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வாகனங்களை பயன்படுத்தி தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடனுதவி மூலம் முறையாக அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.