அரியலூர் மாவட்ட தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,
ஆன்லைன் மூலம் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதலுக்கான பரிந்துரை செய்வதற்கான செலவின தொகை வழங்கப்படாததை கண்டித்து பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்டதலைவர் அருண்பிரசாத் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல், ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராஜா, சட்ட ஆலோசகர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வேப்பந்தட்டை உள்ளிட்ட தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல் அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, கிராம நிர்வாக அலுவலர்களுக்கென தனி ஊதியம் வழங்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு தங்களிடமும் கருத்து கேட்க வேண்டும். மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதலாக பார்க்கும் ஊர்களுக்கென தனித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலர் பழனிவேல், நிர்வாகிகள் சீனிவாசன் ஜோதி, கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.