கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி தாலுகா அலுவலகம் முன் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அவினாசி,
ஆன்லைன் மூலம் வழங்கும் சான்றிதழ்களுக்கு இணையதள செலவு தொகை வழங்கவேண்டும். கிராமநிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி தாலுகா அலுவலகம் முன் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்ட செயலாளர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் செந்தில்குமார் முன்னிலைவகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 40–க்கும் மேற்பட்ட கிராமநிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.