கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-20 22:15 GMT

மதுரை,

மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்–லைன் சான்றுகளுக்கு பரிந்துரை செய்ய மடிக்கணினி, இணைய வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் அல்லது அதற்கான செலவினத்தொகையை வழங்க வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரைக்கு பின்பு பட்டா மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு இட மாறுதலுக்கான கலந்தாய்வை தமிழகம் முழுவதும் ஒரே நாளிலும், ஒரே மாதிரியாகவும் நடத்த வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு கிராம அலுவலர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சேகர், கூட்டுறவு சங்கத்தலைவர் தனசேகரன், கோட்ட தலைவர் மாரியப்பன், அமைப்பு செயலாளர் சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்