பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எழுத படிக்க தெரிந்த அனைத்து ஓட்டுநர்களுக்கும் பேட்ஜ் வழங்கிட வேண்டும். அநியாயமான அபராதங்களையும், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டண உயர்வையும் வாபஸ் வாங்க வேண்டும். இன்சூரன்ஸ் அநியாய கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2017-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கார்பரேட் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை தமிழகத்திற்கு அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், வீரமணி, ராஜேந்திரன், சாமிநாதன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.