அரூரில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரூரில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-12-19 22:45 GMT
அரூர்,

தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் வேலாயுதம், மாநில பொருளாளர் மாது, மாநில விவசாய அணி தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கும் நிதியை பல்நோக்கு லேம்ப் கூட்டுறவு சங்கத்திற்கு அரசு வழங்க வேண்டும். பழங்குடியினர் துணை சிறப்பு திட்டத்தின் கீழ் பல துறைகள் வழங்கும் உதவி தொகையை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வழங்க வேண்டும். சித்தேரி, சிட்லிங் மலைவாழ் மக்களுக்கு மானியத்தில் விவசாய கடன், தொழில்கடன், சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி கடன் ஆகியவை வழங்க வேண்டும். மாவட்ட வாரியாக ஒதுக்கப்படும் நிதியை என்.ஜி.ஓ.க்கள் மூலம் வழங்காமல் லேம்ப் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தொ.மு.ச. மாநில துணை தலைவர் பழனி, நிர்வாகிகள் குப்புசாமி, பெருமாள், பெரியசாமி, மஞ்சுளா, ராமாயி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்