உடுமலையில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று உடுமலை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-12-18 22:00 GMT

உடுமலை,

முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை ஆகியோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று உடுமலை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் குணசேகரன், பொருளாளர் செல்வராஜ், தலைவர் நந்தகோபால் மற்றும் நிர்வாகி ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளான உடல் உழைப்பு தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்