மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி பல்லடத்தில் 21–ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொங்கலூர், பெருந்தொழுவு, எல்லப்பாளையம்புதூர் துணை மின்நிலையம் மூலம் 3 மாத காலமாக விவசாயத்திற்கு முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
பொங்கலூர்,
பொங்கலூர், பெருந்தொழுவு, எல்லப்பாளையம்புதூர் துணை மின்நிலையம் மூலம் 3 மாத காலமாக விவசாயத்திற்கு முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. எனவே அரசு அறிவித்தப்படி விவசாயத்திற்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காத மின்வாரியத்தை கண்டித்து வருகிற 21–ந் தேதி காலை 11 மணிக்கு பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. கண்டியன்கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோபால் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாசன சபை தலைவர்கள், அரசியல்கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.