நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லை கண்காட்சியில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள்
நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லையில் நேற்று நடந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றன.
நெல்லை,
திரையுலகில் தனது சிறந்த நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்., கலைத்துறையில் ஜொலித்த அவர் அரசியலிலும் முத்திரை பதித்தார். அவர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் சாதனைகளை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழா மாவட்டம்தோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய ரசிகர்களும் விழாவை கொண்டாடி வருகிறார்கள். நெல்லை டவுன் லட்சுமி திருமண மகாலில் நேற்று ரசிகர்கள் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் எம்.ஜி. ஆரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. அவரது ஒரு வயது, 14 வயது புகைப்படம், அவருடைய தந்தை கோபாலமேனன்- தாய் சத்தியபாமா, அவர்கள் வாழ்ந்த வீடு, வளர்ப்பு பிள்ளைகளுடன் எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஜனாதிபதி, பிரதமர்கள் மற்றும் மாநில முதல்-மந்திரிகள், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் இருந்த புகைப்படங்கள், ரசிகர்கள், தொண்டர்களின் வீடுகளில் உணவு அருந்தும் படங்கள், சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுடன் உணவு அருந்தும் படம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் இடம்பெற்று இருந்தன.
எம்.ஜி.ஆரின் நடிப்பை பாராட்டி அவருக்கு, அண்ணா வீரவாள் வழங்கிய போது எடுத்த புகைப்படத்தில் அவருடன் கருணாநிதி, என்.வி.நடராஜன், முரசொலிமாறன் உள்ளிட்டோர் உள்ளனர். உலக தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை எம்.ஜி.ஆர். இந்திராகாந்தியுடன் அமர்ந்து பார்க்கும் படம், நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நடந்த பாராட்டு விழா, அரசு விழா படங்கள், நடிகர்- நடிகைகளுடன் உள்ள புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த அத்தனை படங்களும் இடம்பெற்று இருந்தன. எம்.ஜி.ஆர். முருகன் வேடத்தில் உள்ள படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த கண்காட்சியை ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்தனர். முன்னதாக கண்காட்சியை டாக்டர் பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார். இன்னிசை கச்சேரி, அன்னதானம், எம்.ஜி.ஆர். புகழுக்கு காரணம் கலைப்பணியா? கருணை மனமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவையும் நடந்தது.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. துரையப்பா, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இளமதி, பாலகிருஷ்ணன், மணி, ஆதம், ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், சங்கர், ஷாலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.