கண்கள் வழியாக காதல் ஆய்வு
‘கண்ணும் கண்ணும் நோக்கினால் காதல் வரும் என்பது சரிதான்’ என்று நவீன ஆய்வு ஒன்று உறுதி செய்திருக்கிறது.
‘கண்ணும் கண்ணும் நோக்கினால் காதல் வரும் என்பது சரிதான்’ என்று நவீன ஆய்வு ஒன்று உறுதி செய்திருக்கிறது. அறிமுகமற்ற ஆணும், பெண்ணும்கூட அதிக நேரம் கண்ணுக்கு கண் நோக்கிக் கொண்டிருந்தால் காதல் வந்துவிட வாய்ப்பு இருக்கிறதாம். அறிமுகமற்ற ஆண் களையும், பெண்களையும் நேருக்கு நேராக உட்காரவைத்து இரண்டு நிமிடங்கள் கண்களை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்களை மூடாமலே பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களது மூளையில், மனோநிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஆழமான அந்த பார்வையில் அன்புக்கும், காதலுக்கும் தேவையான மாற்றங்கள் இருவரிடமும் நிகழ்ந்ததாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் முதல் முறையாக பார்த்த நிலையிலும், அவர்கள் பார்வையிலே காதல் ஊடுருவியதை கண்டு சிலிர்த்திருக்கிறார்கள். இது இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சி.
இந்தியாவை பொறுத்தவரையில் முன்பு ஆண்களின் பார்வைக்கு அதிக சுதந்திரமும், பெண்களின் பார்வைக்கு தடையும் போடப்பட்டிருந்தது. ஆண்களை நேருக்கு நேர் பார்ப்பவள், திரும்பித் திரும்பி பார்ப்பவள் அவ்வளவு நல்லவள் அல்ல என்பது போன்ற கருத்து முன்பு நிலவி வந்தது. இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக சக்தி இருக்கிறது. அவர்கள் ஒரே பார்வையிலே, அந்த ஆண் நல்லவனா? கெட்டவனா? என்று முடிவு செய்துவிடுவார்கள். முடிவெடுக்கும் மையமான இடதுபக்க மூளை பெண்களுக்கு கூடுதல் சக்தியோடு இயங்குவதுதான் இதற்கான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.