மனிதர்களால் பழியை சுமக்கும் அப்பாவி ஆந்தைகள்
இயற்கையை விரும்பி ரசிப்பவர்களுக்குகூட ஆந்தை என்றால் கொஞ்சம் திகில் தான். காரணம் இதைச் சுற்றி பரவி வரும் பல மூட நம்பிக்கைகள். இதனால் கொல்லப்படும் ஆந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இயற்கையை விரும்பி ரசிப்பவர்களுக்குகூட ஆந்தை என்றால் கொஞ்சம் திகில் தான். காரணம் இதைச் சுற்றி பரவி வரும் பல மூட நம்பிக்கைகள். இதனால் கொல்லப்படும் ஆந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அழியும் நிலையில் உள்ள ஆந்தைகளைப் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது வனத்துறை. இவைகள் பெருமளவு அழிக்கப்பட என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டால் தான், அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆந்தை இடுகாட்டில் வாழும் பறவை. இதன் முகத்தில் விழிப்பதே அபசகுனம் என்ற கருத்து நிலவுகிறது. அது தவறு. மற்ற பறவைகளைப் போல இதுவும் ஒரு பறவை. இதற்கென்று சில தனிப்பட்ட குணங்கள் உண்டு. இருட்டில் வாழக்கூடியது. இருட்டு என்றாலே அனைவருக்கும் பயம். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆந்தை வசிக்காது. அதனால் தனிமையான பகுதிகளில் சென்று வாழும். ஆந்தைகள் வாழ பெரிய மரப்பொந்துகள் தேவை. அது நகரப் பகுதிகளில் கிடைக்காது. அதனால் அது அடர்ந்த மரங்களைத் தேடிச் சென்று இடம்பிடித்து விடும். இதனுடைய செய்கைகள் பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அது ரொம்பவே பயந்த பறவை. இதை அபசகுனமாகப் பார்க்க ஒன்றுமே இல்லை. இதன் சத்தம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அது பயத்திற்குரியதல்ல. வங்காளதேசத்தில் ஆந்தை, லட்சுமியின் வாகனமாக கருதப்படுவதால் காலையில் ஆந்தை முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று நம்பு கிறார்கள். அங்குள்ளவர்கள் வீடுகளில் ஆந்தை படங்களை காண முடியும்.
ஆந்தை பெயரைச் சொல்லி மற்றவர்களை மட்டம்தட்டும் நடைமுறையும் இங்குள்ளது. தமக்கு பிடிக்காதவரின் பார்வையை குறிப்பிட்டு, ‘ஆந்தை முழி முழிக்கிறான்’ என்று சொல்வார்கள். தான் நினைத்த காரியம் நடக்காவிட்டால், ‘இன்றைக்கு ஆந்தை முகத்தில் விழித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்’ என்பார்கள். தாங்கள் ஒழுங்காக எந்த காரியத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு பழியை ஆந்தை மீது சுமத்திவிடுகிறார்கள். காரணமே இல்லாமல் ஆந்தை அதை எல்லாம் சுமந்துகொண்டிருக்கிறது.
எல்லோருக்கும் இனிமையான தீபாவளி ஆந்தைக்கு மட்டும் திகிலானது. அன்று ஆந்தைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒளிந்துகொண்டிருக்கும். வங்காளத்தில் தீபாவளி அன்று கொண்டாடப்படும் காளி பூஜையில் ஆந்தைகளை பலி கொடுக்கும் வழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் லாபம் கிடைக்கவும் ஆந்தைகளை பலி கொடுப்பார்கள். ஆந்தைகள் கிடைப்பது அபூர்வம் என்ற போதிலும் அதை பிடித்துத்தருவதையே சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள். காடுகளில் பல இரவுகள் காத்திருந்து ஆந்தைகளை பிடிக்கும் அவர்கள், தீபாவளி சீசனில் ஒரு ஆந்தைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கிவிடுகிறார்கள். இப்போது ஆந்தை களுக்கான புக்கிங் ஆன்லைனிலும் நடக்கிறது.
மனதிற்கு பிடித்தவர்களை வசப்படுத்த செய்யப்படும் மாந்த்ரீகத்திற்கும் ஆந்தை தேவைப்படுவதாக சொல்கிறார்கள். எதிர் காலத்தை கணித்துச் சொல்லவும், தீராத வியாதிகளை தீர்க்கவும் இந்த ஆந்தை மாந்த்ரீகம் பயன்படுவதாகவும் நம்புகிறார்கள். தீர்க்க முடியாத பிரச்சினையால் தவிப்பவர் களின் தலையை ஆந்தை மூலம் சுற்றி, சிறப்பு மந்திரத்தை உச்சரித்தால் அந்த ஆந்தை அவர்கள் கனவில் வந்து தீர்வு சொல்லும் என்ற நம்பிக்கையும் இப்போது இருந்துகொண்டிருக்கிறது. வசியம் என்கிற இல்லாத கலையை வைத்து போலி மந்திரவாதிகள் பணம் சம்பாதிக்க பாவம் ஆந்தைகளும் காரணமாக இருந்துகொண்டிருக்கின்றன.
ஆந்தைகளை வைத்து லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்த மந்திரவாதி ஒருவர் சொல்கிறார்:
“ஒருவரை பிடிக்காதவரை பழிவாங்க ஆந்தை யாகம் செய்வோம். சத்ருக்களை அழிப்பதற்காக செய்யப்படும் அந்த யாகத்தில் ஆந்தை ரத்தமும், எலும்பும் பயன்படுத்தப்படும். இதற்காக பயன்படுத்தப்படும் ஆந்தை முதலில் சுத்தி செய்யப்படும்.. அந்த ஆந்தையை குளிப்பாட்டி நதிக்கரையோரம்வைத்து இரவு முழுவதும் பூஜை செய்வோம். அதன் பின்புதான் யாகத்தில் அதன் உயிரை பலிகொடுப்போம்” என்றார்.
இப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக்கொண்டு ஆந்தைகள் படும் அவஸ்தையை சொல்லிமாளாது. இதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்பவர்கள்கூட தங்களுக்கு கஷ்டம் வரும்போது ரகசியமாக இந்த ஆந்தை பூஜையை செய்து, கூடுதலாக கஷ்டத்தையும், பாவத்தையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். ஆந்தைகளை வதைப்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கிறார்கள். மூட நம்பிக்கை பயன்பாடு களுக்காக ஆந்தைகள் வெளிநாடுகளுக்கும் கள்ளத்தனமாக கடத்தப்படுகின்றன.
மனிதர்களால் இவ்வளவு கொடுமை களுக்கு ஆளாகும் இந்த பறவையால் மக்களுக்கு விளையும் நன்மைகள் ஏராளம். இது நோய்களை பரப்பும் எலிகளை கொல்லுகிறது. வயல்களில் உற்பத்தியாகும் பயிர்களில் 30 சதவீதத்தை எலிகள் அழிக்கிறது. இரவு வேளைகளில் வயல்வெளிகளுக்கு செல்லும் ஆந்தைகள் , எலி பொந்துக்களை தேடி அழிக்கிறது. இதனால் விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தைகள் திகழ்கின்றன. விவசாயிகளால் பிடிக்க முடியாத எலிகளை, ஆந்தைகள் எளிதாக வேட்டையாடி விவசாயத்திற்கு துணைபுரிகிறது.
ஆந்தையின் வட்டமான கண்கள் இதற்கு ஒரு விநோதமான வடிவத்தை தருகிறது. இதன் கருவிழிகள் கிட்டத்தட்ட தலை அருகே இருக்கும். ஆந்தைகளுக்கு கண்ணே பிரதானமானது. இரண்டு கோணத்திலிருந்தும் பார்க்கும். கண்ணில் இருக்கும் ஒளியைக் கொண்டு இருளை கிழித்துக்கொண்டு போகும் சக்தி இதற்கு உண்டு. இது தன் தலையையும் எல்லா பக்கமும் திருப்பும் சக்திபடைத்தது. மரத்தில் இது இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பகலில் மரப்பொந்தை விட்டு வெளியே வராது. இரவில் மட்டும் தான் இரை தேட வெளியே வரும். ஆனால் இதன் குரல் இதனை காட்டிக்கொடுத்துவிடும். தனக்கும், தன் குஞ்சு களுக்கும் போதுமான அளவுக்கு மட்டும் இரை தேடி விட்டு தான் திரும்ப வரும். அப்போதுதான் இது மாட்டிக்கொள்ளும்.