ஓடும் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது
ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை,
அதேபோன்று கடந்த 4–ந் தேதி தன்பாத் ரெயில்நிலையத்தில் இருந்து ஆலப்புழா ரெயில் நிலையத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த வடமாநிலத்தை சேர்ந்த பப்பு என்பவரிடமிருந்து 900 ரூபாயை திருநங்கைகள் பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடத்தில் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்திக்கு தகவல் கிடைத்தது.உடனே அவர் போலீசாருடன் சென்று பயணிகளை தொந்தரவு செய்த 4 திருநங்கைகளை பிடித்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த பவ்யா (வயது 22), கனகா (23), ஷோபனா (25), சங்கவி (30) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மகாவீர், பப்பு ஆகியோரிடம் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.24,900 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.