திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் ககன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் சிக்கிய மீனவவர்க

Update: 2017-12-16 23:33 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் ககன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் சிக்கிய மீனவவர்களை காப்பாற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பாலா என்கிற பாலயோகி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் நா.வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன், மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் குமார், செஞ்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 100–க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கக்கோரியும் மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டு அவர்களை கண்டுபிடிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில மகளிரணி செயலாளர் சித்ரா, அமைப்பு செயலாளர் கண்ணன், கடம்பத்தூர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொன்.கங்காதரன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி பெ.கமலம்மாள், மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார், மத்திய மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு, காஞ்சீபுரம் நகர தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் உமாபதி, வெங்கடேசன், துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்